தலைவன் வருகின்றான், திமிராய் துணிந்து அடிப்பான்: விஷால் ஆன்தம் வெளியீடு

ஒரு தலைவன் வருகிறான்; புது தலைவன் வருகிறான் என்ற வரிகளை கொண்ட அந்த பாடல், விஷால் அரசியல் களம் நோக்கி மெதுவாக நகர்வதை சுட்டிக் காட்டுகிறது

ஒரு தலைவன் வருகிறான்; புது தலைவன் வருகிறான் என்ற வரிகளை கொண்ட அந்த பாடல், விஷால் அரசியல் களம் நோக்கி மெதுவாக நகர்வதை சுட்டிக் காட்டுகிறது

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vishal Anthem, Actor Vishal

நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு "தலைவன் வருகிறான்" என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisment

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு "தலைவன் வருகிறான்" என்ற “விஷால் ஆன்தம்“ வெளியிடப்பட்டது.

இந்த பாடலை "கொலை விளையும் நிலம்" ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார். இஷான் தேவ் இசையில் முருகன் மந்திரம், பாடல் வரிகளை எழுதி உள்ளார். நிகில் மேத்யூ, இஷான் தேவ் பாடலை பாடியுள்ளனர்.

விஷால் ஆன்தம் குழுவினரை வரவழைத்து பாராட்டிய விஷால், "பாடல் நல்லா இருந்தது. ஆனால், கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது என்று நெகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும், திரையுலகுக்கு தான் ஆற்றி வரும் பணிகள் இதே உற்சாகத்தோடு தொடரும் என அவர்களிடம் தெரிவித்த விஷால், இனி நான் எப்போதெல்லாம் லேசாக சோர்வடைகிறேனோ; அப்போதெல்லாம் இந்த பாடல் என்னை உற்சாகப்படுத்தி பணிபுரிய வைக்கும் என கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

ஒரு தலைவன் வருகிறான்; புது தலைவன் வருகிறான் என்ற வரிகளை கொண்ட அந்த பாடல், விஷால் அரசியல் களம் நோக்கி மெதுவாக நகர்வதை சுட்டிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: