அமெரிக்காவில் படமாக இருக்கிறது ‘விஜய் 62’

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

மலையாள ஒளிப்பதிவாளர் க்ரீஷ் கங்காதரன், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் ஆர்ட் டைரக்டராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.

‘விஜய் 62’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொல்கத்தாவில் நடைபெற்றது. ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. ராம் – லட்சுமணன் என்ற இரட்டையர்கள் இந்த சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, விஜய் – கீர்த்தி சுரேஷ் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி கூட கோவூரில் உள்ள மாதா மருத்துவக் கல்லூரியில் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் விஜய் – கீர்த்தி சுரேஷ் டூயட் பாடல்களைப் படமாக்க இருக்கின்றனர். அடுத்த மாதம் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா செல்கிறது படக்குழு.

×Close
×Close