Advertisment

Thalapathy 63: தளபதி 63-யில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

Thalapathy 63: இதற்கான படபிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறதாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy 63, vijay to play a dual role?

Thalapathy 63: நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததிலிருந்து தினம் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.

Advertisment

இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, இந்துஜா, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ’தளபதி 63’ படத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம் விஜய். அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் அவர் வருகிறாராம். இதற்கான படபிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறதாம்.

முன்னதாக, ’அழகிய தமிழ் மகன், கத்தி’ ஆகியப் படங்களில் இரு வேடங்களில் நடித்திருந்த விஜய், ‘மெர்சல்’ படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

தவிர, ‘தளபதி 63’ படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக விஜய் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவலை தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் தீபாவளியான அக்டோபர் 27-ம் தேதி ரிலீஸாவது குறிப்பிடத் தக்கது!

Atlee Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment