Advertisment

பள்ளி வளாகத்துக்குள் புகைப்பிடித்ததாக தளபதி 64 குழுவினர் மீது குற்றச்சாட்டு

திரைப்படக் குழுவினரை உள்ளே அனுமதித்ததற்காக மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகளையும் கண்டித்துள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actor Vijay, Vijay Thalapathy 64, Thalapathy 64 movie, Thalapathy 64 planning to wrap up by 2020 february, விஜய், தளபதி 64, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சந்தனு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், director Lokesh Kanagaraj, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthnu Bhagyaraj, Antony Varghese, VJ Ramya, Lintu Rony, Gouri Kishan, Thalapathy 64 latest news

Actor Vijay, Vijay Thalapathy 64, Thalapathy 64 movie, Thalapathy 64 planning to wrap up by 2020 february, விஜய், தளபதி 64, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சந்தனு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், director Lokesh Kanagaraj, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthnu Bhagyaraj, Antony Varghese, VJ Ramya, Lintu Rony, Gouri Kishan, Thalapathy 64 latest news

Thalapathy 64: நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 64’ என்றழைக்கப்படும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனை ‘கைதி’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி 64 குழுவினர் பல்வேறு COTPA விதிமீறல்கள் செய்துள்ளதாக புகையிலை மானிட்டர் ஆப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisment

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

தளபதி 64 படக்குழுவினர் பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பின் போது பள்ளி வளாகத்திற்குள் படக்குழுவினர் புகைபிடிப்பது கண்டறியப்பட்டுள்ளது. “COTPA (சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம்) வின் பிரிவு 4, ‘பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்று கூறுகிறது. மறுபுறம், பிரிவு 6 (ஆ) எந்தவொரு கல்வி நிறுவனத்தின் 100 யார்டுகளுக்குள் சிகரெட் அல்லது வேறு எந்த புகையிலை பொருட்களையும் விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது. பள்ளி, கல்லூரி அல்லது எந்தவொரு கல்வி மையமாகவும் இருக்கலாம். எண்ணற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளிக்குள்ளேயே புகைபிடிப்பதன் மூலம் திரைப்படக் குழுவினர் தங்களுடைய அலட்சியத்தைக் காட்டியுள்ளதாக, புகையிலை மானிட்டர் ஆப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதோடு தளபதி 64 குழுவினருக்கு எதிராக புகாரைப் பதிவு செய்ததுடன், திரைப்படக் குழுவினரை உள்ளே அனுமதித்ததற்காக மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகளையும் கண்டித்துள்ளது. மேலும், விக்டோரியா மெமோரியல் பிளைண்ட் பள்ளியில் “நோ ஸ்மோக்கிங்” என்ற குறியீட்டை  வைக்கவும், திரைப்படக் குழுக்களை கல்வி நிறுவனங்களுக்குள் படப்பிடிப்புக்கு அனுமதிப்பதை நிறுத்தவும் மாற்றுத் திறனாளி நலத்துறையிடம் கேட்டுள்ளது.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment