Thalapathy Vijay: தளபதி விஜய் ஆடல், பாடல், நடிப்பு, நகைச்சுவை, ஆக்ஷன் என சினிமாவுக்கு தேவையான அனைத்திலும் ஃபர்ஸ்ட் கிளாஸ். நடிப்பு, நடனத்தைப் போலவே விஜய்யின் குரலுக்கும் பல ரசிகர்கள் அடிமை. 1994-ல் ‘ரசிகன்’ படத்தில் இடம்பெற்ற ‘பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி’ என்ற பாடல் தான் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல். தேவா இசையில், பின்னணி பாடகி சித்ராவுடன் இணைந்து இப்பாடலைப் பாடியிருந்தார் விஜய். இவர் பாடிய 35-வது பாடலாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘குட்டி ஸ்டோரி’ இடம்பெற்றுள்ளது.
Advertisment
சமீபமாக தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய். சரி அவர் வேறு நடிகர்களுக்குப் பாடிய பாடல்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதை இங்கே குறிப்பிடுகிறோம்...
துள்ளித் திரிந்த காலம் - அருண் விஜய்
ஜெயந்தின் இசையில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் விஜய்.
வேலை - விக்னேஷ்
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில், நாசர், பிரேம்ஜி ஆகியோருடன் இணைந்து இப்பாடலை பாடியிருக்கிறார்.
பெரியண்ணா - சூர்யா
இந்தப் படத்தில் மொத்தம் 3 பாடல்களை பாடியிருக்கிறார் விஜய். எஸ். பரணியின் இசையில் ‘ஜுடாடி லைலா’ என்ற பாடலை மட்டும் மறைந்த பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் விஜய். மற்ற இரண்டு பாடல்களிலும் சோலோ பெர்ஃபார்மென்ஸ்! இந்தப் படம் வெளியான சமயத்தில், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”