/tamil-ie/media/media_files/uploads/2017/12/vijay.jpg)
சிபிராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சத்யா’ படம் நன்றாக இருப்பதால், படத்தைப் பார்த்த ‘தளபதி’ விஜய் சிபிராஜைப் பாராட்டியுள்ளார்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘சத்யா’. சிபிராஜ் ஹீரோவாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்த் ராஜ், யோகிபாபு, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அருண்மணி பழனி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.
த்ரில்லர் படமான இது, தெலுங்கில் வெளியான ‘ஷனம்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. பெரும்பாலான திரையரங்குகளில், அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
‘சத்யா’ படத்தின் விமர்சனத்தைப் படிக்க: https://www.ietamil.com/entertainment/sibirajs-sathya-movie-review/
இந்தப் படத்தைப் பார்த்த ‘தளபதி’ விஜய், சிபிராஜை அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்தத் தகவலை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சிபிராஜ். விஜய்யின் ரசிகரான சிபிராஜுக்கு, இந்தப் பாராட்டு மறக்க முடியாத பாராட்டாக இருக்கும்.
,
#Vijay Anna called and congratulated me for the big success of #Sathya! #ProudFanMoment ????????????
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) December 11, 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.