/tamil-ie/media/media_files/uploads/2019/09/Verithanam-sets-new-record.jpg)
பிகில்
Bigil Telugu Business: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிக எதிர்ப்பார்ப்புக்குரிய பிகில் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.
Happy to announce that #Bigil Telugu rights have been bagged by @smkoneru and @EastCoastPrdns ???? #Bigil will be screened across 400 screens in AP and Telangana this Diwali ????????????
— Archana Kalpathi (@archanakalpathi) September 11, 2019
இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளை ஈஸ்ட் ஹவுஸ் புரொடக்ஷன் மற்றும் மகேஷ் எஸ் கொனேரு வாங்கியுள்ளதாக பிகிலின் தயாரிப்பு குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட கல்யாண் ராமின் ஆக்ஷன் - த்ரில்லர் படமான 118-ஐ மகேஷ் தயாரித்திருந்தார். அதோடு பிளாக்பஸ்டர் படங்களான ’பாகுபலி: தி பிகினிங்’ மற்றும் ’பாகுபலி: தி கன்க்லுஷன்’ ஆகியப் படங்களின் மார்க்கெட்டிங் டீமில் உறுப்பினராகவும் இருந்தார்.
பிக்பாஸ் இல்லத்தில் எனக்கு நடந்த கொடுமை: ஜாங்கிரி மதுமிதா பேட்டி
பிகிலின் தெலுங்கு வர்த்தகத்தைக் குறிப்பிட்டு, ”பிகில் தெலுங்கு உரிமையை ஈஸ்ட் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மகேஷ் எஸ் கொனேரு ஆகியோர் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400 ஸ்கிரீன்களில் வெளியாகும்” என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்டி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இதனை #BigilTelugu என்ற ஹேஷ்டேக்கில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.