நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படம் 'அதாகப்பட்டது மகா ஜனங்களே'. இன்பசேகர் என்பவர் இயக்கும் இப்படத்தில் ரேஷ்மா ரத்தோர் என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், கருணாகரன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.
காமெடி த்ரில்லர் வகையில் உருவாகும் இப்படம், ஜூன் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.