/indian-express-tamil/media/media_files/2025/10/22/rashmika-2025-10-22-18-50-07.jpg)
'நேஷ்னல் க்ரஷ்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான ‘கிரிக்பார்ட்டி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, தெலுங்கு, கன்னடம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தார்.
இவர்ரன்பீர் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் மூலம் நடிகை ராஷ்மிகா பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார். இதையடுத்து, தனுஷ் நடிப்பில் இந்தாண்டு வெளியான ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. தற்போது, நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் ஆதித்யா சர்போதார் இயக்கியுள்ளா ‘தம்மா’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆயுஷ்மான் குரானா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2025 -ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில்
’தம்மா’ திரைப்படமும் ஒன்று. வரலாற்று ஆசிரியர் காட்டேரியாக மாறி, ஒரு மோசமான ரத்த உறவை எதிர்கொள்வதை மையமாகக் வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
காதல் மற்றும் திகில் கலந்த ’தம்மா’ திரைப்படம் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் அதன் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.25.11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், ’ஸ்ட்ரீ 2’- க்குப் பிறகு, மடோக்கின் ஹாரர் காமெடி யுனிவர்ஸில் இரண்டாவது பெரிய தொடக்கத்தை பெற்ற படமாக ’தம்மா’ சாதனை படைத்துள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டில் அதிக ஓபனிங்கை பெற்ற பாலிவுட் படங்களின் பட்டியலிலும் ’தம்மா’ இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், ‘தம்மா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, ’தம்மா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக கோபிள் மற்றும் இணையத்தில் வெளியிட தடை விதிக்க கோரி படக்குழு சார்ப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, புதிய படங்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்வதை தடுக்காவிடில் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவார்கள் என கருத்து தெரிவித்தார். மேலும், ‘தம்மா’ படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு நவம்பர் 14-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us