/tamil-ie/media/media_files/uploads/2022/07/Legend-Saravana-1.jpg)
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருள் சரவணன் நடிப்பில் நேற்று வெளியான தி லெஜன்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சமூகவலைதளங்களில் படத்தின் மீதான விமர்சனங்கள் கடுமையாக வந்துகொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்கள் வந்த பிறகு பலரும் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இதனை பயன்படுத்திக்கொள்கின்றனர். இதன் மூலம் பிரபலமாகி தற்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் பல நடிகர் நடிகைகள் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். மேலும் ஏராளமானவர்கள் இந்த வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பெரும் பணக்காரர்கள் தங்களது நிறுவனத்தின விளம்பரங்களில் நடித்து பிரபலமடைவதும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தில் அந்த காலகட்டத்தில் பிரபலமான நடிகர்களை வைத்து தங்களது நிறுவனத்தை ப்ரமோட் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது தொழிலதிபர்கள் பலரும் தங்களது நிறுவனத்தில் விளம்பரங்களில் தாங்களே நடித்து ஒரே நேரத்தில் நிறுவனத்திற்கு விளம்பரமும், தங்களது பரமோஷனும் என இரண்டு நன்மைகள் பெறுகின்றனர். அந்த வகையில் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலருடன் ஜோடி சேர்ந்து புகழ் பெற்றவர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் சரவணன்.
இவரது விளம்பரங்கள் பிரபலமானாலும் இணையதங்களில் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வந்தது. ஒரு கட்டத்தில் விளம்பரங்களில் நடித்தவர் படங்களில் நடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தபோது, தடாலடியாக ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் அருள் சரவணன ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்பது தான் அந்த அறிவிப்பு.
அஜித் நடிப்பில் உல்லாசம் என்ற படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், படத்திற்கு தி லெஜன்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், நெட்டிசன்கள் தங்களுக்கு கன்டன்ட் கிடைத்துவிட்டதாக கூறி கலாய்க்க தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து நாசர், பிரபு, விஜயகுமார். விவேக், யோகிபாபு, சுமன், வம்சி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்க்ள ஊர்வசி, கீர்த்திகா என இரண்டு நாயகிகள் என படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்திற்காக அருள் சரணவன் கோடிகளை கொட்டி தயாரித்துள்ளார் என்ற தகவலும் கூடவே வெளியானது.
அதனைத் தொடர்ந்து படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய அருள் சரவணன் தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்த நாயகிகள் அனைவரையும் அழைத்து விழாவை சிறப்பித்தார். படத்தின் டிரெய்லரும் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை என்று தகவல் வெளியானது.
அதன்பிறகு ஒரு வழியாக இந்த படத்தை வெளியிட கோபுரம் சினிமாஸ் முன்வந்த நிலையில், படம் ஜூலை 28-ந் தேதி (நேற்று) வெளியானது தமிழ் மட்டுமல்லாது பான் இந்தியா படமாக வெளியான தி லெஜன்ட் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், நெட்டின்கள் பலரும் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
சமீப காலமாக தெலுங்கில் பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், மற்றும் கன்னடத்தில் கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்களில் இந்திய அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் எப்போது வரும் என்று தமிழ் ரசிகர்களே கோலிவுட் சினிமாவை விமர்சிக்க தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மாதம் வெளியான விக்ரம் பெரிய ஹிட் கொடுத்தது.
#TheLegend = #veerasamy one word review 💥💥💥 @Jharrisjayaraj #velraj did their job good as usual..@yoursthelegend annachi please pan India movie panni kollywood maanatha vaangatheega....
— கீச்சர் (@keecher007) July 28, 2022
ஆனால் அந்த பெயரை தி லெஜன்ட் தற்போது பாழாக்கிவிடும் போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர், இந்த படத்தில் ஹாரிஷ் ஜெயராஜின் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவை தவிர சொல்லிக்கொள்ளும்படி வேறு எதுவும் இல்லை அண்ணாச்சி தயவு செய்து பான் இந்தியா படம் பண்ணி கோலிவுட் மானத்தை வாங்காதீங்க என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.