சின்ன வயதில் இருந்து, இப்போ வரைக்கும்... ரஜினிக்கு பிடித்த இந்த பாட்டு; கேட்டா பயம் வரும்!

சின்ன வயதில் இருந்து தற்போது வரைக்கும் தனக்கு பிடித்த பாடல் என்ன என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார்.

சின்ன வயதில் இருந்து தற்போது வரைக்கும் தனக்கு பிடித்த பாடல் என்ன என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
rajini

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என அன்போடு அழைக்கிறார்கள். வெறும் பஸ் நடத்துநராக இருந்த ரஜினி திரைத்துறையில் ஏற்படுத்திய தாக்கம் கடலளவு பெரியது. தனது ஸ்டைலினால் தனித்துவம் பெற்ற நடிகர் ரஜினி கடந்த 1975-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

Advertisment

பின்னர் ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினி பெரும்பாலும் எதிர்மறையான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வெளியான ‘கவிக்குயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். ’படிக்காதவன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’ ’வேலைக்காரன்’ ‘குரு சிஷ்யன்’, ‘ராஜாதி ராஜா’, ‘அண்ணாமலை’ ‘தளபதி’ என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலை வைத்தே அவரது படங்களில் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ‘சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும்’ போன்ற பாடல்கள் இன்று வரை மிகவும் பிரபலமான பாடலாக உள்ளது. அன்று முதல் தற்போது உள்ள இளம் இயக்குநர்கள் வரை அனைவரின் இயக்கத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அண்மையில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.’ஜெயிலர் 2’ திரைப்படம் 2026-ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று ரஜினி தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், சின்ன வயதில் இருந்து தற்போது வரை தனக்கு பிடித்த ஒரு பாடல் குறித்து ரஜினி நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ” நான் அதிகமாக கேட்கும் பாடல் ‘போனால் போகட்டும் போடா’ பாடல் தான். சின்ன வயதில் இருந்து இப்ப வரைக்கும் அந்த பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாட்டை கேட்டல் அப்படியே நின்று விடுவேன். எனக்கு தமிழ் தெரியாத போது என் தமிழ் தெரிந்த நண்பனிடம் இதன் பொருள் கேட்டு தெரிந்து கொண்டேன். அதன் பின்னர் இந்த பாடல் ரொம்ப பிடித்துவிட்டது” என்றார்.

Cinema Rajini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: