சினிமாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் உச்சக்கட்ட புகழையோ,செல்வாக்கையோ அடைவதில்லை. அப்படியே எல்லா புகழையும் அடைந்து, பெரும் பணக்காரரானாலும், திடீரென சினிமாவில் பல்வேறு காரணங்களால் வாய்ப்புகளை இழந்து, தொடர் தோல்விகளுக்குப் பின் கடும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிய நடிகர், நடிகைகள் ஏராளம்.
பாலிவுட் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் அமிதாப் பச்சன், எத்தனை எத்தனை தோல்விகளை கண்டுள்ளார். 1996-ஆம் ஆண்டில் அவருடைய ஏ.பி.சி.எல். நிறுவனம் பெங்களூரில் நடத்திய உலக அழகிப்போட்டி கடும் இழப்பை ஏற்படுத்த, தனது ‘பிராக்தீத்ஷா’ பங்களாவையே விற்க முயற்சித்தார் அமிதாப்.
அப்படி, திரை பிரபலங்களுக்கு தோல்விகள், இழப்புகள் என்பது சகஜம். அப்படிப்பட்ட இழப்புகளால் எல்லாவற்றையும், எந்நேரத்திலும் இழக்கக்கூடாது என நினைத்து, சினிமாவை தவிர்த்து சேஃபர் சைடில் ஒரு சைட் பிசினஸ் நடத்தும் திரை பிரபலங்கள் பாலிவுட்டில் எக்கச்சக்கம். அந்த சைடு பிசினஸையும் வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பது கூடுதல் ஆச்சரியம்.
அப்படி, சினிமாவை தவிர்த்து மற்றொரு தொழிலில் ஈடுபடும் 9 பாலிவுட் திரை பிரபலங்கள் இதோ:
1. மாதுரி தீட்சித்:
’தி டான்ஸிங் குயின் ஆஃப் பாலிவுட்’ என்றால் மாதுரி தீட்சித் தான். தனது இந்த அசாத்திய நடன திறமையை பயன்படுத்து, ‘டான்ஸ் வித் மாதுரி’ என்ற இணைய நடனப்பள்ளியை அண்மையில் ஆரம்பித்தார் மாதுரி. நடனத்தையும், உடற்பயிற்சியையும் கலந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முனைவதே இந்த நடனப்பள்ளியின் நோக்கம்.
2. சுனில் ஷெட்டி:
நல்ல நடிகர் என்பதை தாண்டி நடிகர் சுனில் ஷெட்டி, மும்பையில் பல உணவகங்களை நடத்துகிறார். அதுமட்டுமல்லாமல், இரவுநேர க்ளப், ’பாப்கார்ன் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சுனில் ஷெட்டி.
3. லாரா தத்தா:
பல வெற்றிப்படங்களின் கதாநாயகியும், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் மனைவியுமான லாரா தத்தா Chabbra 555 என்ற பெயரில் புடவை ஷோரூம், Bheegi Basanti என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இவை தவிர்த்து, பல உடற்பயிற்சி டிவிடிக்களையும் வெளியிட்டு வருகிறார் லாரா தத்தா.
4. அர்ஜூன் ராம்பால்:
நடிகர் அர்ஜூன் ராம்பால் டெல்லியில் மதுபான விடுதி ஒன்றையும், Chasing Ganesha என்ற பெயரில் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் ஒன்றையும் வெற்றிகரமாக நடிப்புக்கு அப்பால் நடத்தி வருகிறார்.
5. மலைக்கா அரோரா:
நடிகை மலைக்கா அரோரா, நடிகைகள் பிபாஷா பாசு மற்றும் சுசேன் கான் ஆகியோருடன் இணைந்து, The Label Life என்ற பெயரில் இணைய ஃபேஷன் இணையத்தளத்தை செயல்படுத்தி வருகிறார்.
6. அஜய் தேவ்கன்:
இவர் மற்ற, நடிகர், நடிகைகள் போல் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான தொழிலில் ஈடுபட்டுள்ளார். குஜராத்தில் சரணாகா என்ற 25 மெகாவாட் திறனுள்ள சோலார் மின்திட்டத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்திருக்கிறார். இதுதவிர்த்து, Devgan Entertainment Software Ltd என்ற பட தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் அஜய் தேவ்கன்.
7. டிவிங்கிள் கண்ணா:
சினிமாவில் பல தோல்விகளை அடைந்தபிறகு வெற்றிகரமான தொழிலதிபராக உருவெடுத்திருக்கிறார் டிவிங்கிள் கண்ணா. Mrs Funnybones மற்றும் The Legend of Lakshmi Prasad ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார் டிவிங்கிள் கண்ணா. இதுமட்டுமில்லங்க, The White Window என்ற உள் அலங்கார நிறுவனத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் டிவிங்கிள் கண்ணா.
8. அக்ஷய் குமார்:
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து Best Deal TV என்ற இணைய ஷாப்பிங் சேனலை நடத்தி வருகிறார் அக்ஷய் குமார். இதுதவிர்த்து, Hari Om Entertainment என்ற பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
9. மிதுன் சக்ரவர்த்தி:
நடிகர் சக்ரவர்த்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். Monarch Group என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் மற்றும் விருந்தோம்பல் சம்பந்தமான சேவைகளையும் வழங்கி வருகிறார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.