இந்தியாவின் இளைய திரைப்பட இயக்குனர், மாஸ்டர் ஆஷிக் ஜினுவின் "திருமதி செல்வி" தமிழ் திரைப்படம் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பு நேற்று (12 ஜனவரி) நடைபெற்றது.
Advertisment
ஆஷிக் ஜினு, 12 வயது, இந்தியாவின் இளைய குறும்பட இயக்குனருக்கான URF தேசிய சாதனையைப் பெற்றுள்ளார். 2019 இல், 10 வயதில் தனது முதல் குறும்படமான பீடிக்காவை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, மாஸ்டர் ஆஷிக் ஜினு ஏழு குறும்படங்கள், ஒரு ஆவணப்படம் மற்றும் இரண்டு வணிகப் படங்களை இயக்கியுள்ளார்.
இதில் மூன்று குறும்படங்கள் சிறந்த இயக்குனருக்கான திருவிதாங்கூர் சர்வதேச விருதை வென்றன. இது தவிர ஆஷிக் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 1 மணி 30 நிமிட கமர்ஷியல் படமான "கொலம்பியன் அகாடமி" உலக சாதனை நாமினேஷனுக்கு சென்றுள்ளது.
ஆஷிக்கின் சமீபத்திய வணிகப் படமான EVA, 2021 இல் படமாக்கப்பட்டது, ஏழு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
தமிழ் சினிமா நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகரான மாஸ்டர் ஆஷிக் ஜினு, ஜனவரி 12 ஆம் தேதி அன்று அவர் இயக்கவிருக்கும் "திருமதி செல்வி" படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் நடிகர் ரியாஸ் கான் வெளியிட்டனர். கே.கே. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ரியாஸ் கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil