/tamil-ie/media/media_files/uploads/2017/08/a971.jpg)
சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால், அப்பாஸ் ஆகியோர் நடித்து 2006-ஆம் ஆண்டு வெளியான படம் 'திருட்டு பயலே'. பாலுணர்வு தொடர்பான கதை என்பதால், படத்திற்கு நிறைய எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும், அழுத்தமான கதை இருந்ததால், படத்தை ரசிகர்கள் ஹிட்டாக்கினார்கள்.
சுமார் 11 வருடங்கள் கழித்து தற்போது பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்டோரை வைத்து திருட்டுப் பயலே இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் சுசி கணேசன். இப்படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை இந்த டீசரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
#ThiruttuPayaley2 First Look Poster featuring @actorsimha and @Amala_amspic.twitter.com/ciBazYHgoV
— Ramesh Bala (@rameshlaus) August 3, 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.