Advertisment

2023-ல் வெளியான முதல் தமிழ் திரைப்படம்; குஷியான பெண்கள்

2023-ல் வெளியான முதல் தமிழ் திரைப்படமான வி3 - பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
latest tamil news, coimbatore news, tamilnadu news, tamil news, latest tamil nadu news, Coimbatore, Coimbatore news, tamil nadu, Kovai, tamil cinema, v3

2023-ல் வெளியான முதல் தமிழ் திரைப்படமான வி3 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

விஷ்னு பிரபு தயாரிப்பிலும் அமுதவாணன் இயக்கத்திலும் வி3 திரைப்படம் இன்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளியானது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். குறிப்பாக 2023-ல் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இது.

அமுதவாணன் இயக்கிய வி3 (விந்தியா,விக்டிம் வெர்டிக்ட்)அப்பாவிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக நம்பப்படும் ஐந்து இளைஞர்களை என்கவுண்டரில் சுடப்படுகிறது.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

திரைக்கு வந்த முதல் நாளே கோவை ப்ரூக்பீல் மாலில் உள்ள திரையரங்களில் வி3 திரைப்படத்தை பார்க்க பெண்கள் குவிந்தனர்.

இந்த திரைப்படத்தை பார்க்க வந்த பெண்கள் கூறியதாவது: “இந்த சமூகத்தில் பெண்கள் எப்படி தைரியமாக வாழவேண்டும், தங்களுக்கு நடக்கும் துயரங்கள், அதற்கு கிடைக்கும் தண்டனைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தி பெண்களுக்கு தைரியத்தையும் ,விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தனர்.

செய்தி: பி. ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment