/tamil-ie/media/media_files/uploads/2017/11/tik-tik-tik.jpg)
ஜெயம் ரவி நடிப்பில், சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள்.
‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. ‘இந்தியாவின் முதல் விண்வெளிப்படம்’ என்ற பெருமையுடன் இந்தப் படம் தயாராகி வருகிறது. ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அசிஸ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். குடியரசு தின விடுமுறையில், அதாவது ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#TikTikTik cleared censors with a U certificate! Coming this Republic Day to blow u off ur seats!! ????????????????????????????????#TikTikTikCensoredWithU#TikTikTikFromJan26pic.twitter.com/cSDMiFjbX9
— Jayam Ravi (@actor_jayamravi) 15 January 2018
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’, அரவிந்த் சாமி நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’ ஆகிய படங்களும் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.