ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இருந்து த்ரிஷா விலகியிருக்கிறார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி வருகிறது. எனவே, முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த த்ரிஷாவுடன், இன்னொரு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்றும், இருவருக்கும் சமமான அளவு முக்கியத்துவம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பலம் ஏர்போர்ட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. பிரபு, ஐஸ்வர்யா,
விக்ரம் – கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்டக் காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் த்ரிஷா. கதை உருவாக்கத்தில் வேறுபாடு இருப்பதால் விலகுவதாக அறிவித்துள்ள த்ரிஷா, படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
‘சாமி’ படத்தில் விக்ரமுக்கு அடுத்து மிக முக்கியப்பங்கு வகித்தவர் த்ரிஷா. ஐயர் பெண்ணாக நடித்திருந்த அவர் விக்ரம், ரமேஷ் கண்ணா மீது மிளகாய்ப்பொடியை வீசுவதும், ‘பஸ்ல போக ரெண்டு ஐம்பது, வர ரெண்டு ஐம்பது. மத்தியானம் சாப்பிட தயிர் சாதம், மாவடு இருக்கு’ என அவர் பேசும் டயலாக்கும் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கும். விக்ரம் – த்ரிஷா இடையிலான காதல் காட்சிகளும் மனம் கவரும் வகையில் இருக்கும்.
ஆனால், ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் பேருக்கு த்ரிஷாவை வைத்துவிட்டு, கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக காட்சிகளை வைத்திருக்கிறாராம் இயக்குநர் ஹரி. ‘சிங்கம்’ முதல் பாகத்தில் அனுஷ்காவை சோலோ ஹீரோயினாக நடிக்கவைத்த ஹரி, இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களில் அவரை ஓரிரு ஸீன்களில் மட்டுமே காட்டிவிட்டு ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசனை ஹீரோயின்களாக நடிக்க வைத்தார்.
அதேபோல் த்ரிஷாவையும் லைட்டாகக் காட்டிவிட்டு, கீர்த்தி சுரேஷுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஹரி. இதனால் கடுப்பாகித்தான் படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.