/tamil-ie/media/media_files/uploads/2017/12/mohini-poster.jpg)
த்ரிஷாவின் ஹாரர் படமான ‘மோகினி’ படத்தின் இசை உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூஸிக் வாங்கியுள்ளது.
மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள படம் ‘மோகினி’. ஹாரர் படமான இதில், ஜாக்கி பாக்னனி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ‘மோகினி’ படத்தின் டிரெய்லர் வருகிற 21ஆம் தேதியும், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இசை வெளியீடு ஜனவரி 12ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. ‘மோகினி’ படத்தின் இசையை, பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூஸிக் வாங்கியுள்ளது.
December 2017Coming-up Next on #Think Music - #Mohini
Music by @MervinJSolomon@iamviveksiva.@trishtrashers@directormadhesh#MohiniTrailerFromDec21st#MohiniAudioFromJan12thpic.twitter.com/yjm4hL0eXU
— Think Music (@thinkmusicindia)
Coming-up Next on #Think Music - #Mohini
— Think Music (@thinkmusicindia) December 20, 2017
Music by @MervinJSolomon@iamviveksiva.@trishtrashers@directormadhesh#MohiniTrailerFromDec21st#MohiniAudioFromJan12thpic.twitter.com/yjm4hL0eXU
த்ரிஷா நடிப்பில் இதற்கு முன்னர் வெளியான ஹாரர் படமான ‘நாயகி’, அவ்வளவாகப் போகவில்லை. அதன்பிறகு தனுஷ் ஜோடியாக நடித்த ‘கொடி’ படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே, ஒரு வெற்றிக்காகக் காத்திருக்கிறார் த்ரிஷா. கடந்த 15 வருடங்களாக ஹீரோயினாக இருக்கும் த்ரிஷாவுக்கு, இந்த வருடம் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.