ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை, ஜெர்மனியில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Advertisment
இது குறித்து ப்ரியங்கா சோப்ரா தனது சமூகவலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். மேலும், அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் தனது போட்டோவை பதிவிட்டிருந்தார்.
ஆனால், பிரதமர் மோடியுடன் சந்தித்தபோது, பிரியங்கா சோப்ரா தனது கால்கள் தெரிவது போல ஆபாசமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர். பலர் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
target="_blank">Was such a lovely coincidence to be in #berlin???????? at the same time as the Prime Minister. Thank you @narendramodi Sir for taking the time from your packed schedule to meet me this morning. ????????
A post shared by Priyanka Chopra (@priyankachopra) on
ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ரியங்கா சோப்ரா என்ன செய்தார் தெரியுமா? இன்றைய கால்கள் என்று தனது இன்ஸ்டாகிராமில் அடுத்த போட்டோவை போட்டுத் தாக்கினார். அதில், ப்ரியங்கா சோப்ரா தனது தாய் மது சோப்ராவுடன் இருக்கிறார். அந்த போட்டாவில் இருவரின் கால்களும் தெரியும்படி பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.