/tamil-ie/media/media_files/uploads/2017/05/a106.jpg)
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' எனும் தொடரில் வில்லியாக நடித்தவர் ரேகா குமார். இத்தொடரின் மூலம் இவர் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், "பெங்களூரைச் சேர்ந்த பிரபல டிவி நடிகை ரேகா குமார், வேலூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுண்ணாம்புக்குட்டை எனும் கிராமத்தின் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தார்" என்பது போன்று செய்திகள் காலை முதல் வெளிவந்த வண்ணம் இருந்தன. சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக இச்செய்தி பரவ ஆரம்பிக்க, பலரும் அவரது படத்தைப் போட்டு RIP என பதிவிட தொடங்கிவிட்டனர்.
இதையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்கள்மூலம் இச்செய்தி ரேகா குமாரை எட்ட, அதன்பின்னர் உடனடியாக ஒரு வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், தான் நலமாக இருப்பதாகவும், கோவிலில் சிருங்கேரி ஷாரதா பெத்தா கோவிலில் சாமி தரிசனம் செய்துக் கொண்டிருப்பதாவும் பேசியுள்ளார்.
எனவே, அவர் இறந்துவிட்டதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்பது தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த விபத்தில் பலியானவர் ரேகா சிந்து எனும் கன்னட டிவி நடிகை ஆவார். சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு 3 பேருடன் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, லாரி மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.