தமிழ்நாட்டில் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை சினிமா நடிகர்கள், நடிகைகள், சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். சின்னத்திரை நடிகைகள் பலரும் கலர் கலரான தாவணி அணிந்து பொங்கல் பண்டிகையை ஹோம்லியாக கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து தெரிவித்துள்ளனர்.
கேப்ரில்லா
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை கேப்ரில்லா, கண்டாங்கி சேலை கட்டி பொங்கல்
“உங்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலோ பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள கேப்ரில்லா இன்னும் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துள்ளார்.
யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் இளஞ்சிவப்பு நிற தாவணியில் தனது அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி குணமடைந்து வந்துள்ள யாஷிகா ஆனந்த் புதுப் பொளிவுடன் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தர்ஷா குப்தா
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா,
“அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்” தர்ஷா குப்தா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாக்ஷி
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சாக்ஷி, தாவணி அணிந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். பொங்கல் வைப்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ள சாக்ஷி, “ஹேப்பி பொங்கல்” என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா
பொங்கல் திருநாளில், சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா, பாவாடை தாவணியில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிருந்து ரசிகர்க்ளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை நாளில், நடிகைகள் கேப்ரில்லா, ஸ்ரீநிஷா, யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா, சாக்ஷி ஆகியோர் கலர் கலரான சேலை மற்றும் தாவணி அணிந்து ஹோம்லி பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“