Advertisment

ஒரே பாடலில் இரண்டு எமோஷன் : ‘வேலைக்காரன்’ டீம் வைத்த சர்ப்ரைஸ் இதுதான்...

‘இறைவா’ + ‘உயிரே’ என ஒரே பாடலில் இரண்டு எமோஷன்களையும் மிக்ஸ் செய்து இசையமைத்திருப்பதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivakarthikeyan, Nayanthara

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சினேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கருத்தவன்லாம் கலீஜா’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்தப் பாடலை ஏகப்பட்ட பேர் கவர் சாங்காக பாடியும், நடனம் ஆடியும் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘இறைவா’ நவம்பர் 2ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை 2 இன் 1 சர்ப்ரைஸ் இருப்பதாக நேற்று அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ். என்ன சர்ப்ரைஸாக இருக்கும் என எல்லோரும் காத்திருக்க, அதை அறிவித்திருக்கின்றனர்.

‘இறைவா’ + ‘உயிரே’ என ஒரே பாடலில் இரண்டு எமோஷன்களையும் மிக்ஸ் செய்து இசையமைத்திருப்பதாக அனிருத் தெரிவித்துள்ளார். வாழ்க்கை மற்றும் காதலைப் பற்றி டிஸ்கஸ் செய்வது போல இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment