Advertisment

சமத்துவத்தை வலியுறுத்தும் மாமன்னன்: பாராட்டிய ரஜினி; நன்றி சொன்ன உதயநிதி

’மாமன்னன்’ படத்தை பாராட்டிய நடிகர் ரஜினி காந்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
மாமன்னன்

மாமன்னன்

’மாமன்னன்’ படத்தை பாராட்டிய நடிகர் ரஜினி காந்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தேவர் மகன் படம் தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சை ஆனது. மேலும் படம் வெளியான பிறகு  இப்படத்தில் மாமன்னன் கதாபாத்திரம் சபாநாயகர் தனபாலை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது என்று பேசப்பட்டது.

இந்நிலையில் இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இதை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு “ சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு  எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் படத்தை பாராட்டிய ரஜினிகாந்துக்கு படக்குழு சார்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். “ சமத்துவம் போற்றும் மாமன்னன் திரைப்படத்தை பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment