Vikram Prabhu Starrer Vaanam Kottattum Release: இன்று “வானம் கொட்டட்டும்” திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. ’படைவீரன்’ பட இயக்குநர் தனசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு பாக்யராஜ் மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வானம் கொட்டட்டும் படத்தை மணிரத்னத்தின் ’மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. அதோடு இப்படத்தின் இணை எழுத்தாளர் என்ற பெருமையும் மணிரத்னத்திற்கு உண்டு. அவர் மற்றொரு இயக்குனருக்காக இணைந்து எழுதிய கடைசி திரைப்படம் 2001-ல் வெளியான ’டும் டும் டும்’. படத்தையும் அவர் தான் தயாரித்தார்.
ஒரு குடும்பப் படமாக, சிறிய நகரத்தின் பின்னணியில் வானம் கொட்டட்டும் படத்தின் கதை அமைந்திருப்பதை அதன் டீசர் உணர்த்தியிருந்தது. நந்தா துரைராஜ், அமிதாஷ், பாலாஜி சக்திவேல் மற்றும் மதுசூதன் ராவ் ஆகியோர் துணை நடித்துள்ளார்கள். புகழ்பெற்ற பாடகர் சித் ஸ்ரீராம், இசையமைப்பாளராக வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். 96 புகழ் பெற்ற கோவிந்த் வசந்தாவுக்குப் பதிலாக அவர் இந்தப் படத்திற்கு இசையமைத்தாலும், சுவாரஸ்யமாக, மணிரத்னத்தில் ‘கடல்’ படத்தின் மூலம் தான் அவர் பின்னணி பாடகராகவும் அறிமுகமானார்.
கேரள ரசிகர்கள் வானம் கொட்டட்டும் படத்தை இந்தத் திரையரங்குகளில் பார்க்கலாம்
வானம் கொட்டட்டும் படக் குழுவினருக்கு நடிகர் ஜெயம் ரவி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
வானம் கொட்டட்டும் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசியுங்கள் என நடிகர் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
”வானம் கொட்டட்டும் திரைப்படம் உங்கள் அனைவரது மனதிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்” என நடிகர் விக்ரம் பிரபு ட்வீட் செய்துள்ளார்.
கதையிலும் வசனத்திலும் மணிரத்னம் டச் இருப்பதாக இந்த பயனர் தெரிவித்துள்ளார்.
முழுக்க முழுக்க குடும்பக் கதையாக உருவாகியிருப்பதாகவும், ராதிகா, சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், பாலாஜி சக்திவேல் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் இந்த பயனர் தெரிவித்துள்ளார்.
சில காலம் படங்களில் நடிக்க வேண்டாம் என்றிருந்தேன். எனக்கும் ராதிகாவுக்கும் ’வானம் கொட்டட்டும்’ கதையை இயக்குனர் தனா விவரித்தார். நாங்கள் உடனடியாக ஓகே சொன்னோம். கதாபாத்திரங்களை உணர்ந்து, அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர், என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஆச்சர்யப் பட வைக்கும் நடிகர்கள் தேர்வு, வானம் கொட்டட்டும் படத்தில் இருப்பதாகக் கூறி நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஒரே படத்தில் நான் இந்தளவுக்கு அக்கறை கொள்ளும் அளவுக்கு அதிகமான நபர்கள் இருந்ததில்லை.. என வானம் கொட்டட்டும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
”எனது டார்லிங்ஸ் விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா, சாந்தனு, ஐஸ்வர்யா மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மணிரத்னத்தின் மேற்பார்வையின் கீழ் மாஸ்டர் பீஸாக வந்துள்ளது” என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.