அந்த பெருமையை பெற்ற முதல் தமிழ்படம் வடசென்னை தான்! கெத்தா சுத்தும் தனுஷ் ரசிகர்கள்!!
நடிகர் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படத்திற்கு ஒரு அறிய வாய்ப்பும் பெருமையும் சீனாவில் இருந்து தேடி வந்துள்ளது. இந்த செய்தியை தனுஷ் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை. இப்படத்தில் இவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி, சீனு மோகன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வடசென்னை படம் சீனா நாட்டில் திரையிடல்:
தனுஷின் வண்டார்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் ஹீரோவின் 30 வருட வாழ்க்கை கூறுகிறது. இப்படத்துக்கு, வேறெந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத பெருமை கிடைத்துள்ளது.
வருகிற 17-ம் தேதி உலகம் முழுவதும் வட சென்னை ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை ஒரு பாடல் புரோமோவும் வெளியாக இருக்கிறது. இதனை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
#vadachennai … 14 more days to go. #oct17 .. will be releasing a song teaser tom at 5 pm. The romance of anbu and padma pic.twitter.com/YQufwrncE2
— Dhanush (@dhanushkraja) 4 October 2018
இந்நிலையில், சீனாவின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட இந்தப் படம் தேர்வாகியுள்ளது. பிங்யாவோ சர்வதேசத் திரைப்பட விழா, நவம்பர் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், 3-ம் நாளன்று வடசென்னை படம் திரையிடப்பட இருக்கிறது. இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook