Advertisment

Vada Chennai : வடசென்னை ரிலீஸ்... 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vada Chennai Release

Vada Chennai : வண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வடசென்னை நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தனுஷ் ரசிகர் பட்டாளம் அனைத்தும் நேற்று முதல் கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.

Advertisment

வெற்றிமாறன் இயக்கியிருக்கும் வடசென்னை படத்தில் ஹீரோவாக நடிகர் தனுஷ் மற்றும் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். படத்தில் பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Vada Chennai release : வடசென்னை ரிலீஸ்... தனுஷ் கட் அவுட் :

நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இப்படத்தின் ரிலீசை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தனுஷ் ரசிகர் பட்டாளங்கள் வடசென்னை கொண்டாட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

பெரும்பாலான திரையரங்குகளில் பெரிய பெரிய கட் அவுட்கள் பெருத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனுஷின் ரசிகர்கள்  அவருக்கு 120 அடியில் கட் அவுட் வைத்து, வெடி வெடித்து ஆரவாரமாக கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.

October 2018

தமிழகம் மட்டுமின்றி அமெரிக்காவிலும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது. நாளை வெளியாகும் இப்படம் வடசென்னை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்குமா?

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment