Advertisment

வடசென்னை: தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணி பட்டையைக் கிளப்புமா?

தனுஷின் ஆட்டம் பாட்டத்திற்கேற்ப வடசென்னை இருப்பதால் படம் ஏமாற்றாது என்றே தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணி, வடசென்னை பாடல் வெளியீடு, vadachennai, Actor Dhanush, Director Vetrimaran

தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணி, வடசென்னை பாடல் வெளியீடு, vadachennai, Actor Dhanush, Director Vetrimaran

வடசென்னை... தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. புதுப்பேட்டை, மாரி ஸ்டைலில் இந்தப் படமும் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Advertisment

நடிகர் தனுஷ் நடிக்க வந்து தற்போது 16 வருடங்கள் ஆகிறது. பல்வேறுவகையான கதாபாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை இளம் வயதிலேயே தேசிய விருது பெறும் அளவிற்கு காட்டியவர். ஆனாலும் அவருக்கு எதிர்மறை அதாவது ஆன்டி ஹீரோ கதாபாத்திரங்கள் அவருக்கு கனகச்சிதமாக பொருந்துவதாக கூறுகின்றனர்.

ஆன்டி ஹீரோவாக அவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றிருப்பதால் அவர் மீண்டும் வடசென்னை படத்தில் அவ்வாறான கதாபாத்திரத்தையே தேர்ந்தெடுத்திருப்பதாக பேச்சு இருக்கிறது. அவருக்கு தேசியவிருதை பெற்றுத் தந்த ஆடுகளம் இயக்குநர் வெற்றிமாறன் யதார்த்தமான கதைக்களத்தை தேர்த்டுத்து படமாக்குவதில் தேர்ந்தவர். இதனாலும் வடசென்னை மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

ஸோ, கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் தனுஷின் கணக்கு தவறாதென்றே தோன்றுகின்றது. தற்போதைய நிலையில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன் வெற்றிப் படமானது மட்டுமல்ல, 2007 தீபாவளி ரேஸில் பாடல்களும் ஹிட்... படத்தின் வியாபாரமும் ஹிட்!

அதே தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் 2010 பொங்கல் ரேஸில் ஆடுகள‌ம் பாடல்களும் படமும் பட்டையைக் கிளப்பின. மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி, தனுஷின் ஆட்டம் பாட்டத்திற்கேற்ப வடசென்னை இருப்பதால் படம் ஏமாற்றாது என்றே தெரிகிறது.

திராவிட ஜீவா

 

Tamil Cinema Dhanush Vetrimaaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment