scorecardresearch

ஓவியாவை ஓரம்கட்டிய சந்தானம் ஹீரோயின்

ஓவியா ஹீரோயின் கிடையாது. அவருக்குப் பதிலாக வைபவி ஷாண்டில்யா நடித்து வருகிறார்.

ஓவியாவை ஓரம்கட்டிய சந்தானம் ஹீரோயின்

ஓவியாவின் வாழ்க்கையை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன், பின் என இரண்டாகப் பிரித்துவிடலாம். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் அவ்வளவாக யாராலும் கொண்டாடப்படாத ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்குப் பிரபலமாகிவிட்டார். அவரைத் தேடி பல்வேறு பட வாய்ப்புகளும் வருகின்றன. அதில் ஒன்றுதான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

கெளதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடிப்பில் ‘ஹர ஹர மஹாதேவஹி’ என்ற படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அடல்ட் காமெடிப் படமான இது வெற்றிகரமாக ஓடியதால், மறுபடியும் அடல்ட் காமெடிப் படத்தை எடுத்து வருகிறார். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், கெளதம் கார்த்திகே ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக ஓவியா நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், ஓவியா ஹீரோயின் கிடையாது. அவருக்குப் பதிலாக வைபவி ஷாண்டில்யா நடித்து வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த வைபவி ஷாண்டில்யா, சந்தானம் ஜோடியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்துவந்தார். அந்தப் படம் தாமதமாகவே, விடிவி கணேஷ் தயாரிப்பில் தான் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திலும் வைபவியை ஹீரோயினாக்கி விட்டார் சந்தானம்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vaibhavi shandilya replaced for oviya

Best of Express