தலைவா… வேற லெவல்! திடீரென ஸ்டாலினை புகழ்ந்த வனிதா

Vanitha vijayakumar praises cm stalin thalaiva vera level: எனக்கு தடுமாற்றங்கள் வரும்போதெல்லாம், பிகில் படத்தில் அனிதா கேரக்டரிடம் விஜய் பேசும் காட்சியைப் பார்ப்பேன் என்று வனிதா தெரிவித்துள்ளார்.

தலைவா வேற லெவல் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார், முதல்வர் ஸ்டாலின். கொரோனா தடுப்பு பணிகள் மட்டுமல்லாமல், அவர் அறிவித்த மக்கள் நலத்திட்டங்களுக்கும் பொதுமக்களிடயே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை வனிதா, முதல்வர் ஸ்டாலின் மிக அழகானவர் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமான நடிகை வனிதா, பின்னர் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தவர், சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அதன் பின்னர் வனிதா, விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் வனிதா இருந்துள்ளார். தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துக் கொண்டவர், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகை வனிதா, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றது முதல்வன் படம் பார்ட் 2 மாதிரி இருக்கிறது என்று கூறியுள்ளார். “ஸ்டாலின் எனது அப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் எப்போதும் ரொம்ப அழகுதான். நிறைய மாற்றங்களை செய்து வருகிறார் தலைவா வேற லெவல்” என்றும் வனிதா தெரிவித்துள்ளார்.

மேலும், சர்ச்சைகள் நம்மை துரத்தும் போது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் எனக்கு பொதுமக்கள் இந்த அளவுக்கு அன்பு கொடுப்பார்கள் என நினைக்கவில்லை என்று வனிதா உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும், நடிகர் விஜய் உடன் நடித்தது நினைவில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்று கூறிய வனிதா, விஜய்யை தளபதியாக மக்களுக்கு தெரியும். ஆனால் எனக்கு அவர் ஒரு நல்ல நண்பராக மனிதராக தெரியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், எனக்கு தடுமாற்றங்கள் வரும்போதெல்லாம், பிகில் படத்தில் அனிதா கேரக்டரிடம் விஜய் பேசும் காட்சியைப் பார்ப்பேன் என்றும் வனிதா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar praises cm stalin thalaiva vera level

Next Story
Vijay TV serial; ஹேமா மீண்டும் கடத்தலா? … குழந்தைக்காக உயிரை பணயம் வைக்கும் அஞ்சலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com