Advertisment

சண்டை போட்ட வனிதா- ரவீந்தர் எப்போ சேர்ந்தாங்க?

வனிதா பீட்டர்பாலை திருமணம் செய்த போது ரவீந்தர் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் பீட்டர் பாலின் மனைவி எலீசபத்துக்காக ஆதரவாக பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

author-image
abhisudha
New Update
Vanitha

Vanitha Vijayakumar and Fatman Ravindar Controversy

பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமாரின் மகளான வனிதா, விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.

Advertisment

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வனிதாவுக்கு, தற்போது சினிமாவிலும், சின்னத்திரையிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதேபோல், தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அப்போது வனிதா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’யாருடைய வாழ்க்கையையும் நினைத்து வருத்தப்பட நேரம் இல்லாத அளவுக்கு இப்போது என் வாழ்க்கை பிஸியாக உள்ளது. கர்மா எல்லாருக்கும் கண்டிப்பாக நடக்கும். அதை நான் உறுதியாக நம்புகிறேன்’ என பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து வனிதா இந்த ட்வீட்டை ரவீந்தருக்காகத் தான் போட்டிருக்கிறார் என கூறி வந்தனர். ஏனெனில், வனிதா பீட்டர்பாலை திருமணம் செய்த போது ரவீந்தர் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் பீட்டர் பாலின் மனைவி எலீசபத்துக்காக ஆதரவாக பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் ட்வீட் குறித்த கேள்விக்கு பதிலளித்த வனிதா, உண்மையில் நான் மனதார ரவீந்தர், மகாலெட்சுமி திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அந்த ட்வீட் நான் எதார்த்தமாக போட்டது. கர்மா யாரையும் சும்மாவிடாது என்பதை நான் என் வாழ்விலேயே பார்த்திருக்கிறேன். அவர்களை மட்டும் குறிப்பிட்டு நான் போடவில்லை. என் வாழ்வில் அப்போது நான்கைந்து விஷயங்கள் நடந்தன. அதனால் அந்த பதிவை போட்டேன், என்றார்.

இருப்பினும் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக ரவீந்தர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பிறகு வனிதா, ரவீந்தர் இருவரும் ஒன்றாக இன்டியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ளது. அதில் வனிதாவின் கேள்விகளுக்கு ரவீந்தர் நிதானமாக சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

அப்போது வனிதா முன்னாடி இருந்த ரவீந்தருக்கும், மகாலட்சுமி வந்தபிறகு இருக்கிற ரவீந்தருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று கேட்க, அதற்கு பதிலளித்த ரவீந்தர், வாழ்க்கைய சந்தோஷமா வாழ கண்டிப்பா ஒரு பொண்ணு தேவை. அதுவே நமக்கு பிடிச்சா பொண்ணு இருக்கிறது இன்னும் சுவாரஸ்யம். அதைவிட அந்த பொண்ணுக்கு நம்மள ரொம்ப பிடிக்கும் போது வாழ்க்கை முழுமையா சந்தோஷமா இருக்கும். மகாலெட்சுமி வந்தபிறகு என் வாழ்க்கை ரொம்ப பெரிசா மாறிச்சு.

எங்க தயாரிப்புல ’முன்னறிவான்’ படம் பண்ணும் போதுதான் மகாலெட்சுமி ஓட அறிமுகம் கிடைச்சது. நாங்க பண்ற இன்னொரு படத்துலயும் அவங்க நடிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சோம். மகாலெட்சுமினா யாருன்னு எல்லாருக்குமே தெரியும். அப்போதான் அவுங்க சில சர்ச்சையில சிக்கும் போது இன்னும் அதிகமா பேசுனோம். அப்படிதான் இது ஆரம்பமானது.

எல்லாருக்குமே மகாவுக்கு இது இரண்டாவது கல்யாணம்தான் தெரியும். எனக்கு இரண்டாவது கல்யாணம்னு யாருக்கும் தெரியல. எல்லாரும் கன்டென்ட்காக அவளை மட்டும் ஃபோகஸ் பண்ணாங்க என்று ரவீந்தர் கூறினார்.

இப்படி ரவீந்தரும், வனிதாவும் தனிப்பட்ட வாழ்க்கை, திருமண சர்ச்சை உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து இன்டியாகிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment