New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/vanitha-power-star-marriage.jpg)
நடிகை வனிதா விஜயகுமாரும், பவர் ஸ்டார் சீனிவாசனும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா அவ்வப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். அதில் சமீபத்திய ஒன்று பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலான நிலையில், வனிதா பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்து கொண்டாரோ என எல்லோருக்கும் சந்தேகம் எழுந்தது.
ஏனெனில், சமீபத்தில் தான் வனிதாவுக்கு நான்காவது திருமணம் நடக்கும் என்று ஜோதிடர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பவர் ஸடாருடன், வனிதா திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும், வனிதாவும் பவர் ஸடாரும் கன்னத்தோடு கன்னம் வைத்து சிரித்ததுபோல் இருக்கும் புகைப்படமும் வெளியானது.
ஆனால் நடிகை வனிதா, அது ஒரு படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று விளக்கமளித்தார். பிக்கப் ட்ராப் என்ற படத்தில் வனிதாவும் பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை பவர் ஸ்டாரே இயக்குகிறார்.
And...❤️❤️❤️❤️🙏 pic.twitter.com/UcxMrCuRHm
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 23, 2021
இந்த நிலையில், இந்த புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டு வனிதா மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரை டேக் செய்திருந்தார். மேலும், எபிக், ஒரிஜினல் கேரக்டர், அக்காவுக்கு நன்றாக பொருந்துகிறது. குடும்பங்களை எப்படி மெயிண்டெயின் செய்ய வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம் எனவும் பதிவிட்டு இருந்தார்.
இந்த ட்வீட்டிற்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சிரித்து சிரித்து கண்களில் தண்ணீர் வரும் எமோஜியை கமெண்டில் பதிவிட்டிருந்தார். மற்றொரு ட்வீட்டில், இது நகைச்சுவையாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் தயவு செய்து என்னை டேக் செய்ய வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
பின்னர் இந்த கமெண்ட்களை லக்ஷ்மி நீக்கிவிட்டார். ஆனால் இதைப்பார்த்த அவரின் ரசிகர்கள், வனிதாவைப் பற்றி கமெண்ட் செய்ய வேண்டாம் என்றார். மேலும், ஏற்கனவே ஒரு பேட்டியில் வனிதா, லஷ்க்மி ராமகிருஷ்ணனை திட்டியதால் அவர் வருத்தப்பட்டார். எனவே வனிதா பற்றி கமெண்ட் செய்ய வேண்டாம் எனக்கேட்டுக் கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.