வெளி உலகத்தையே பார்த்திராத, அந்தமான் காட்டில் வாழும் பழங்குடி மக்களில் ஒருவர் பரபரப்பான நகரத்திற்குள் வந்தால் என்ன நடக்கும் என்ற ஒரு லைனில் முதல் பகுதியை கலகலப்பாக எடுத்து சென்ற இயக்குநர் விஜயால், காட்டையும் அந்த மக்களையும் காக்க வேண்டும் என்ற லைனில் பயணித்து, கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதை நிருபித்துள்ளார்.
கதாநாயகன் ஜெயம் ரவியைவிட நாயகி சயிஷாவுக்கு நல்ல வாய்ப்பு. சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய அறிமுக காட்சிகள் அசத்தல். பாதுகாப்பு படையினரை புலி புரட்டி எடுக்கும் போது அவரது நடிப்பு அசத்தல். நடனத்திலும் முத்திரை பதிக்கிறார். பளிச் சென்று மேக்கப்புடன் வருவது சில காட்சிகளில் திணிப்பாக தெரிகிறார். விபத்தில் சிக்கிய ஜெயம் ரவியை காப்பாற்ற நினைப்பது, அவர் ரகளையில் பயந்து ஓடுவது என முத்திரை பதித்துள்ளார்.
ஜெயம் ரவிக்கு வசனங்கள் அதிகம் இல்லை. அவர் உடலும், மேக்கப்பும் பழங்குடியினராகவே அவரை மாற்றியிருக்கிறது. அவரை டார்ஜானாக காட்ட முயற்சித்திருக்கிறார், இயக்குநர். கதைக்கு அதில் வாய்ப்பு இல்லாததால் செயற்கையாக தோன்றுகிறது.
தம்பி ராமையா படம் முழுக்க வருகிறார். அவ்வப்போது கலகலக்க வைக்கிறார். தலைவாசல் விஜய் காட்சிகள் கதைக்குள் ஒட்டவில்லை. தேவையில்லாத கேரக்டர் அது. ஹரிஸ் ஜெயராஜின் 50 படம். பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை லயிப்பை ஏற்படுத்தவில்லை.
இடைவேளைக்கு பின்னர், அடுத்தடுத்த காட்சிகளை கணித்துவிட முடிவதால் சுவராஸ்யம் மிஸ்சாகிறது.
பவர்புல்லான ஒன்லைனை பிடித்த அளவுக்கு திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், இன்னும் ரசிக்கும்படி கொடுத்திருக்க முடியும்.
வனமகன் வசப்படுத்த தவறிவிட்டான்.