/tamil-ie/media/media_files/uploads/2018/02/sarathkumar-and-varalakshmi.jpg)
தன்னுடைய தந்தை சரத்குமாருடன் முதன்முதலாக இணைந்து நடிக்க இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
சரத்குமார் - ஏ.வெங்கடேஷ் காம்பினேஷன் எப்போதுமே கமர்ஷியல் ஹிட் தான். இருவரும் தற்போது இணைந்திருக்கும் படம் ‘பாம்பன்’. எஸ்.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். பாடல் பதிவுடன் கடந்த மாதம் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கின.
இந்நிலையில், ‘பாம்பன்’ படத்தில் தன் தந்தையுடன் இணைந்து நடிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம் வரலட்சுமி. அவர் ஹீரோயின் இல்லையென்றாலும், ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம்.
Happy to announce that I will be acting along side my father @realsarathkumar in #Pamban directed by @venkateshdirect super excited to share screen space with u daddy.. all the best to the entire team..!! pic.twitter.com/KD3eYY4Dgz
— varu sarathkumar (@varusarath) 18 February 2018
கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், ‘சபாஷ் நாயுடு’ படத்தில் தன் தந்தையுடன் இணைந்து நடிக்கிறார். கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக், ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில் தன் தந்தையுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில், சரத்குமார் - வரலட்சுமி இருவரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.