Varalakshmi Sarathkumar: நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது.
வரும் 23-ம் தேதி நடைபெறும் இத்தேர்தலில் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யும், பாக்கியராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் களம் இறங்குகிறார்கள்.
பாண்டவர் அணியில் நாசர் தலைவராகவும், சுவாமி சங்கரதாஸ் அணியில் பாக்கியராஜ் தலைவராகவும் போட்டியிடுகிறார்கள்.
Nadigar Sangam Election: பாண்டவர் அணி – பாக்யராஜ் அணி: மோதிக் கொள்வது யார் யார்?
இந்நிலையில் விஷால் தனது பாண்டவர் அணியை ப்ரொமோட் செய்யும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இம்முறை களத்தில் இல்லாத சரத்குமாரை சாடுவதாக அந்த வீடியோவில் அமைந்திருக்கிறது. ’உண்மை வெற்றி பெறும்’ என்ற கேப்ஷனோடு அந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரத் குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியிடமிருந்து விஷாலுக்கு எதிரான கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில், “விஷால், உன்னுடைய சமீபத்திய வீடியோவில் இந்தளவு நீ தரம் தாழ்ந்திருப்பது என்னை வருத்தமடையச் செய்திருக்கிறது. நான் உன் மேல் வைத்திருந்த மரியாதையை நீயே கெடுத்துக் கொண்டுள்ளாய். என் அப்பா மீது நீ கொண்டுள்ள வன்மத்தைப் பார்த்து வருத்தமடைகிறேன். எப்போதும் சட்டம் தான் பெரியது என்பாய். ஒரு மனிதனின் தவறு நிரூபிக்கப்படும் வரை இன்னசெண்டாகத் தான் இருப்பான் என அந்த சட்டம் தான் சொல்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/06/varalaxmi-sarathkumars-letter.jpg)
ஒருவேளை என் தந்தை தவறு செய்திருந்தால் இந்நேரம் அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் ஏதேனும் வகுப்புகளுக்கு சென்று, கொஞ்சம் வளர்வாயாக. இந்த மாதிரி வீடியோக்களின் மூலம் உனது மரியாதையை நீயே குறைத்துக் கொள்கிறாய். இதன் மூலம் நீ வளர்ந்த விதம் புரிகிறது.
புனிதர் போல் நடந்துக் கொள்ளாதே. எங்கள் அனைவருக்கும் உனது ரெட்டை வேடமும், பொய்களும் நன்கு தெரியும். ஒரு வேளை நீ புனிதனாக இருந்தால், உன்னுடைய பாண்டவர் அணியை சேர்ந்தவர் ஏன் பிரிந்து சென்று, உன்னை தோற்கடிக்க வேறொரு அணியை உருவாக்க வேண்டும்?
நீ இதுவரைக்கும் செய்ததை எண்ணி பெருமைப்படுபவனாக இருந்தால், அதை சொல்லாமல், ஆட்டத்திலேயே இல்லாத என் தந்தையை ஏன் கீழிறக்கப் பார்க்கிறாய்?
உன் மேல் மரியாதை வைத்து, எப்போதும் உனக்கு நல்ல தோழியாக இருந்திருக்கிறேன். இப்போது அதை நீ வெகு தொலைவிற்கு கொண்டு சென்று விட்டாய். நீ செய்ததை எல்லாம் பாஸிட்டிவாக வீடியோ போடாமல், இப்படி தரம் தாழ்ந்து போனது எனக்கு கவலையளிக்கிறது.
குறைந்தபட்சம் நீ திரைக்குப் பின்னால், சிறந்த நடிகனாக இருப்பதாக நான் நினைக்கிறேன். நீ சொல்வதைப் போல், “உண்மை வெல்லும்” என நானும் நம்புகிறேன்.
என்னுடைய வாக்கினை நீ இழந்து விட்டாய்
கடவுள் ஆசிர்வதிக்கட்டும்,
வரலட்சுமி சரத்குமார்”
இப்படியாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை உறுதி செய்தவற்காக வரலட்சுமியை தொடர்பு கொண்டோம்.
“ஆமா நான் தான் சொன்னேன். என்னல்லாம் சொல்லணும்ன்னு நெனச்சேனோ, அதைத் தான் சொல்லிருக்கேன்” என கடிதத்தையும், அதில் அவர் கூறியிருக்கும் விஷயங்களையும் உறுதிப்படுத்தினார்.