இனிகோ பிரபாகர், ஷைனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வீரையன்’. இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், வேல.ராமமூர்த்தி, ‘கயல்’ வின்செண்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் பரீத். ‘சண்டி வீரன்’ படத்துக்கு இசையமைத்த அருணகிரி, இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். இன்று இந்தப் படம் ரிலீஸாகிறது.