Advertisment

‘வேலைக்காரன்’ இசை வெளியீடு எப்போது?

படத்தின் ரிலீஸுக்கு இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிவகார்த்திகேயனுக்காக காசு கூட வாங்காமல் டான்ஸ் ஆடிய நயன்தாரா

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, இன்று மாலை வெளியாக உள்ளது.

Advertisment

மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில், நயன்தாரா முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில், இந்தப் படத்தின் மூலம் வில்லனாகத் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன், பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

24 ஏஎம் ஸ்டுடியோ சார்பில், ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ‘ரெமோ’வைத் தொடர்ந்து இவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘கருத்தவன்லாம் கலீஜா’ மற்றும் ‘இறைவா’ என இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளன. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு, இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

Tamil Cinema Mohan Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment