Advertisment

ஃபேர்வெல் டே கொண்டாடும் ‘வேலைக்காரன்’ படக்குழு

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள ‘வேலைக்காரன்’ படக்குழுவினர், நாளை ஃபேர்வெல் டே கொண்டாட இருக்கின்றனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபேர்வெல் டே கொண்டாடும் ‘வேலைக்காரன்’ படக்குழு

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள ‘வேலைக்காரன்’ படக்குழுவினர், நாளை ஃபேர்வெல் டே கொண்டாட இருக்கின்றனர்.

Advertisment

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. மலையாள முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகிணி, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, 24 ஏ.எம். ஸ்டுடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இறைவா’ பாடலின் படப்பிடிப்பு, சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்றது. சென்னையிலும் சில நாட்கள் இறுதிக்கட்ட காட்சிகளைப் படமாக்கினர். ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்ததை அடுத்து, நாளை ஃபேர்வெல் டே கொண்டாட இருக்கிறது படக்குழு.

‘வெள்ளிக்கிழமை வேலைக்காரனில் பணிபுரிந்த வேலைக்காரர்களைக் கவுரவிக்கும் #VelaikkaranFarewellDay’ என 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

,

இதேபோல், கடந்த வருடம் ‘ரெமோ’ படத்துக்கும் ஃபேர்வெல் டே கொண்டாடப்பட்டது. ‘வேலைக்காரன்’ படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வழங்க 68 நாட்கள் ஆகும் என சென்சார் போர்டு அறிவித்துள்ள நிலையில், குறித்த நேரத்தில் ‘வேலைக்காரன்’ ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Tamil Cinema Mohan Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment