‘மெர்சல்’ குறித்த வெங்கட்பிரபுவின் கமெண்ட் : விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டையாக மாறுகிறதா?

‘உங்கள் படங்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களில் இருந்து சுடப்பட்டதுதானே... நீங்கள் ஏன் அதற்கு கிரெடிட் கொடுக்கவில்லை?’ என ட்விட்டரில் பலர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

By: Updated: October 20, 2017, 02:59:23 PM

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகள் இந்திய அளவில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக ‘மெர்சல்’ பற்றி வசைமாரி பொழிய… எதிர்க்கட்சியான காங்கிரஸோ ஆதரவாகப் பேசிவருகிறது.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தைப் பற்றி புதுவிதமான பிரச்னை ஒன்றைக் கிளப்பியுள்ளார் வெங்கட் பிரபு. ‘மெர்சல்’ படத்தைப் பாராட்டியுள்ள வெங்கட் பிரபு, ‘பஞ்சு சாருக்கு கிரெடிட் எங்க?’ என்ற திரியைக் கிள்ளிப்போட, அது பத்தாயிரம் வாலா பட்டாசாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

‘உங்கள் படங்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களில் இருந்து சுடப்பட்டதுதானே… நீங்கள் ஏன் அதற்கு கிரெடிட் கொடுக்கவில்லை?’ என ட்விட்டரில் பலர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ‘நீங்க கிரெடிட் குடுத்தா, ‘மெர்சல்’ படத்துக்கும் கொடுக்கலாம்’ என விஜய் ரசிகர் ஒருவர் சொல்ல, வெங்கட்பிரபு ரசிகர் ஒருவர், ‘ஒண்ணு ரெண்டு டைரக்டர்னா கிரெடிட் கொடுக்கலாம். அட்லீ கிரெடிட் கொடுக்கணும்னா லிஸ்ட் ரொம்ப நீளமா போகுமே…’ என்று பதில் கொடுத்துள்ளார்.

‘எங்க சூர்யாவை வச்சி ‘மாஸ்’ படத்துல செஞ்சுட்டு நீயெல்லாம் குறை சொல்ற. காப்பி அடிச்சாலும் எண்டெர்டெயின்மெண்ட் பண்றான். நீயும் இருக்கியே…’ என சூர்யா ரசிகர் ஒருவர் கோபத்தில் வெங்கட் பிரபுவுக்கு எதிராகப் பொங்கியுள்ளார். ‘அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்தை, ஏற்கெனவே தான் இயக்கிய ‘சரோஜா’ படத்தில் இருந்து காப்பியடித்தேன்’ என இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டி கொடுத்ததாக ஒரு இணையதளத்தில் வெளியான செய்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டுள்ளார் ஒருவர்.

‘சார்…. நான் விஜய் படம்னா நியாயம் பேசுவேன் சார். மத்தபடி அஜித் படம்னு வந்தா ஹாலிவுட் டிவிடி கைல எடுத்துருவேன் சார்’ என ‘ராஜா ராணி’ ஜெய் டயலாக்கில் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரன் பாஜகவில் உறுப்பினராக இருக்கிறார். ‘மெர்சல்’ படம் பாஜகவை விமர்சித்திருப்பதால், கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபுவும் ‘மெர்சல்’ படத்துக்கு எதிராகப் பேசியுள்ளார் என்ற கருத்தையும் சிலர் கூறியுள்ளனர்.

பொதுவாக, வெங்கட் பிரபுவும், அவர் தம்பி பிரேம்ஜி அமரனும் தங்களை அஜித்தின் ரசிகர்களாக எப்போதுமே காட்டிக் கொள்வார்கள். அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சண்டை ஏற்படுவது இயல்பு. அஜித்தின் ரசிகரான வெங்கட் பிரபு ‘மெர்சல்’ பற்றி கிண்டல் அடித்திருப்பதன் மூலம், மறுபடியும் அஜித் – விஜய் ரசிகர்களிடையே சண்டையாக உருவெடுத்து வருகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Venkat prabhus mersal movie comment will create ajith and vijay fans fight

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X