scorecardresearch

13ஆம் தேதி வெளியாகிறது வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ டீஸர்!

காமெடிப் படமான இது, ஹாலிவுட்டில் உருவான ‘ஹேங் ஓவர்’ பட பாணியில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

party

வெங்கட்பிரபு இயக்கியுள்ள ‘பார்ட்டி’ படத்தின் டீஸர், டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில் ஜெய், ஷாம், ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பிஜி தீவில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி இசையமைக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் டீஸர் வருகிற 13ஆம் தேதி ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

காமெடிப் படமான இது, ஹாலிவுட்டில் உருவான ‘ஹேங் ஓவர்’ பட பாணியில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Venkat prabhus party teaser will release december 13th