பழம்பெரும் ஹிந்தி நடிகர் சஷி கபூர், உடல்நலக் குறைவால் மும்பையில் இன்று காலமானார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர் சசி கபூர். கொல்கத்தாவில் கபூர் குடும்பத்தில் பிறந்த சஷி கபூர், குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். ஏகப்பட்ட ஹிந்திப் படங்களில் நடித்துள்ளவர், ஒருசில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக இருந்தாலும், இயக்கத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். அத்துடன், இரண்டு படங்களை இயக்கவும் செய்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்த ஜெனிஃபர் கெண்டல் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சஷி கபூருக்கு, குணால் கபூர், கரண் கபூர், சஞ்சனா கபூர் என 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு, 2011ஆம் ஆண்டு ‘பத்ம பூஷண்’ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. அத்துடன், இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதையும் பெற்றுள்ளார் சஷி கபூர்.
79 வயதான சஷி கபூர், உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அங்கேயே இன்று மாலை காலமானார். இவருடைய இழப்பு, ஹிந்தி சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
சசி கபூர் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமல்லாது முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி
Today, on International Day of Persons with Disabilities sharing what PM said about achievements of our Divyang sisters and brothers, during last week's #MannKiBaat. He also reiterated the Government's efforts towards greater accessibility and opportunity. https://t.co/vAGmVbWauU
— PMO India (@PMOIndia) 3 December 2017
அமீர் கான்
— Aamir Khan (@aamir_khan) 4 December 2017
காங்கிரஸ் இரங்கல்
The brilliant #ShashiKapoor hugely contributed to paving the way for alternative pathbreaking cinema, nationally & internationally. My sympathies and prayers are with his family, friends & fans: Smt. Sonia Gandhi pic.twitter.com/SDEPizVPu6
— Congress (@INCIndia) 4 December 2017
வீரேந்திர சேவாக்
One of the most iconic dialogues ever, #ShashiKapoor . You will continue to inspire future generation of actors. Condolences to family and friends. pic.twitter.com/QBoLf7IlPb
— Virender Sehwag (@virendersehwag) 4 December 2017
சரத்குமார்
Deeply saddened by the demise of legandary actor #ShashiKapoor . He would ever be remembered for his magnificent acting & flamboyancy in delivering dialogues. May his soul RIP.
— R Sarath Kumar (@realsarathkumar) 4 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.