தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களுக்கு இசையமைத்த ஆதித்யன், நேற்று காலமானார்.
கார்த்திக், பானுப்ரியா நடித்த ‘அமரன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஆதித்யன். ‘நாளைய செய்தி’, ‘டேவிட் அங்கிள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘தொட்டில் குழந்தை’, ‘மாமன் மகள்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்துள்ளார்.
ஜெயா டிவியில், ‘ஆதித்யன்ஸ் கிச்சன்ஸ்’ என்ற சமையல் நிகழ்ச்சியை 8 வருடங்களாக நடத்தி வந்தார். சென்னையைச் சேர்ந்த இவர், ஹைதராபாத்தில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று ஹைதராபாத்தில் காலமானார். இவருக்கு 63 வயதாகிறது.