தமிழ் மற்றும் தெலுங்கில் காமெடி ரோலில் நடித்து வருபவர் வித்யூலேகா ராமன். அதிலும், தெலுங்கில் இவர் பல படங்களை கையில் வைத்திருக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக தளங்களில் வித்யூலேகா வெளியிட்டார்.
November 2017
இவ்வளவு நாள் காமெடி நடிகையாக பார்த்த ஒருவரை, கவர்ச்சி உடையில் பார்த்த போது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து சிலர் அவரிடம், 'நீங்கள் ஹீரோயினாக முயற்சி செய்கிறீர்களா?' என்று கேள்வி எழுப்பினர். ரசிகர்களை சிலரும் அவரது கவர்ச்சிப் படங்கள் குறித்து விமர்சித்தனர்.
November 2017
இவற்றிற்கு பதில் அளிக்கும் விதமாக, வித்யூ ராமன் தனது ட்விட்டரில், இன்று சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். மேலும், தான் எதற்காக அப்படி கவர்ச்சியாக படங்கள் எடுத்தேன் என்பது குறித்தும் அவர் மூன்று காரணங்களை தெரிவித்துள்ளார்.
* ஒரு காமெடியனாக நான் மிகவும் பிஸியாக நடித்துவருகிறேன். ஹீரோயினாக நடிப்பது குறித்து இதுவரை நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
* பெண்களுக்கு தங்கள் உடல் பெரிதாக இருந்தாலும், என்ன நிறமாக இருந்தாலும், அதை அழகானதாக உணர வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இப்படங்கள் எடுத்தேன்.
*இதைப் பார்த்து நூறு பெண்களாவது தன்னம்பிக்கையையும், உறுதியையும் வளர்த்துக் கொண்டால், எனக்கு அதுவே போதும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
November 2017