ஏன் சம்பளத்தை அதிகரிக்கவில்லை? விஜய் சேதுபதி விளக்கம்!

சம்பளம் தான் முக்கியம் என்றால், பாதையை மாற்றி வேறு வழியில் சென்று கொண்டிருப்பேன்.

தமிழக சினிமாவில் உள்ள ஹீரோக்களுக்கு ரசிகர்கள், வெறியர்கள் இருப்பது சகஜம். ஆனால், ஹேட்டர்ஸ்களே இல்லாமல் இருக்கும் ஹீரோக்களின் எண்ணிக்கை என்பது மிக மிக குறைவு. அதற்கு ஒரு சான்றாக நடிகர் விக்ரமை சொல்லலாம். அவருக்கு விஜய், அஜித் அளவிற்கு பெருமளவு ரசிகர்கள் பட்டாளம் கிடையாது என்றாலும், ரசிகர்களில் எதிர்ப்பாளர்கள் என்று யாருமே கிடையாது. சமூக தளங்களில் இவரை கிண்டல் செய்தோ அல்லது இவரது படங்களை கேலி செய்தோ ஒரு மீம் கூட நாம் காண முடியாது. அந்தளவிற்கு அனைவரையும் தனது சிறப்பான நடிப்பாலும், எதார்த்தமான குணாதிசயத்தாலும் ரசிகர்களை கட்டிப் போட்டிருப்பார்.

அதேபோன்ற, எதிர்ப்பாளர்கள் இல்லாத மற்றொரு சமகாலத்து ஹீரோ என்றால் அது விஜய் சேதுபதி தான். காரணம் இவரது படங்களை விட, இவரது மிக இயல்பான கேரக்டரையே ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். நிஜ வாழ்க்கையில் பெரிதாக பந்தா இல்லாமல், தனது பெரும்பான்மையான படங்களில் வழக்கமான மசாலாக்களை சேர்க்காமல் எதார்த்தமாக இருப்பதே இவரது பலம். அதேசமயம், மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதிலும் எந்த தயக்கமும் இவர் காட்டுவதில்லை.

தற்போது இரட்டை இயக்குனர்களான புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவனுடன் இணைந்து ‘விக்ரம் – வேதா’ எனும் படத்தில் அவர் நடித்துள்ளார். அதிலும் ரவுடியாக நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, “நிறைய வெற்றி படங்கள் கொடுத்தாலும், ஏன் பெரியளவுக்கு சம்பளத்தை அதிகரிக்கவில்லை” என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “மாதவனிடம் பேசிக் கொண்டிருந்த போது, எப்படி உடம்பைக் குறைத்தீர்கள் என்று கேட்டேன். ‘திருப்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன், உணவைக் குறைத்தேன் என்றார். நானும் திருப்தி என்ற மருந்தை எடுத்துக் கொள்கிறேன். என் படங்கள் பெரிய வெற்றியடைய வேண்டும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

சம்பளம் தான் முக்கியம் என்றால், பாதையை மாற்றி வேறு வழியில் சென்று கொண்டிருப்பேன். ஒவ்வொரு படத்துக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போயிருப்பேன். நான் அதற்காக சினிமாவுக்கு வரவில்லை. அதற்காக கஷ்டப்படவில்லை. நடிப்பு மீதுள்ள காதலினால் மட்டுமே சினிமாவுக்கு வந்தேன்” என்று பதில் அளித்துள்ளார்.

தட் ஈஸ் விஜய் சேதுபதி!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close