இனி 'தளபதி' விஜய்; வெளியானது 'விஜய் 61' பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்!

நாளை விஜய்யின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் டைட்டில் ‘மெர்சல்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் ஒரு முக்கியமான விஷயம்  என்னவெனில், இதுநாள் வரை ‘இளையதளபதி’ என்று அழைக்கப்பட்டு வந்த விஜய்யை, மெர்சல் பட போஸ்டரில் ‘தளபதி’ விஜய் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஃபர்ஸ்ட் லுக்கை நாம் பார்க்கும் போது, கழுத்தில் மாலைகளுடன் காளைகள் ஓடி வருகிறது. அப்படியெனில், அப்பா விஜய் அல்லது படத்தின் ஓப்பனிங் சாங்கின் ஓப்பனிங்காக கூட இந்த காட்சி இருக்கலாம். கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மனதில் கொண்டு, இந்த பாடலை எடுத்திருக்கலாம். ஹிட்டடிக்கும் பாருங்க. அந்தப் பாடல் இப்படி கூட தொடங்கலாம்…

காள…காள
இது எங்க வீட்டு காள…
தேவையில்லாம உள்ள வந்தா
அறுத்துடுவேன் வால…

×Close
×Close