Advertisment

ரிலீஸுக்கு முன்பே 10 நிமிட படத்தை வெளியிடும் விஜய் ஆண்டனி

படம் ரிலீஸாவதற்கு 15 நாட்களுக்கு முன்பே, படத்தின் முதல் 10 நிமிடத்தை வெளியிட இருக்கிறார் விஜய் ஆண்டனி.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay antony reduces his salary by 25 % to help producers

vijay antony reduces his salary by 25 % to help producers

படம் ரிலீஸாவதற்கு 15 நாட்களுக்கு முன்பே, படத்தின் முதல் 10 நிமிடத்தை வெளியிட இருக்கிறார் விஜய் ஆண்டனி.

Advertisment

அறிமுக இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், டயானா, மகிமா நம்பியார், ராதாரவி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். வருகிற 30ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 15ஆம் தேதி சத்யம் தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இதில், படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளை வெளியிட இருக்கின்றனர். விஜய் ஆண்டனி நடிப்பில் ஏற்கெனவே ரிலீஸான ‘சைத்தான்’ படத்துக்கும் இப்படிப்பட்ட நடைமுறையைத்தான் கடைப்பிடித்தார் விஜய் ஆண்டனி.

Tamil Cinema Vijay Antony Mahima Nambiar Annadurai Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment