/indian-express-tamil/media/media_files/2025/10/06/vijay-devarakonda-2025-10-06-21-20-31.jpg)
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று (அக்டோபர் 6) தெலங்கானாவின் ஜோகுலாம்பா கதவால் மாவட்டத்தில் கார் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில், அவர் எவ்வித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தகவலை பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டா விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு எவ்வித காயமும் இல்லாமல் உயிர் தப்பிய நிலையில், அவரது ஆடம்பரக் கார் விபத்தில் சேதமடைந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த விபத்து, தேவரகொண்டா ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத்துக்குத் திரும்பும் வழியில் நடந்ததாகத் தெரிகிறது. முன்னதாக, இன்றைய தினம் காலையில், அவர் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் இருந்த வீடியோக்கள் ஆன்லைனில் வெளியாகி இருந்தது, அவர் அங்கிருந்து திரும்பும் போது, வேறொரு நான்கு சக்கர வாகனம் அவரது கார் மீது உரசியதால், அவரது லெக்சஸ் எல்.எம். 350எச் ஏடபிள்யூடி (LM 350h AWD) கார் சிறு சேதமடைந்துள்ளது. இந்த காரின் விலை ரூ2 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய மற்றொரு கார், நிற்காமல் அவ்விடத்தை விட்டு வேகமாகச் சென்றுவிட்டது. இருப்பினும், விஜயின் ஓட்டுநர் இது குறித்து உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா தனது நண்பர் ஒருவரின் காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Breaking News :
— Filmy Bowl (@FilmyBowl) October 6, 2025
VIJAY DEVARAKONDA MET WITH ACCIDENT #VijayDeverakonda's car met with an accident. Near Undavalli in Jogulamba Gadwala district, the Bolero suddenly took a right turn and was hit by Vijay's Lexus model car coming from behind. Vijay Deverakonda was not injured… pic.twitter.com/pbk1OmpJOl
விஜய் தேவரகொண்டா தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளுக்குப் பிறகு, இரண்டு நாட்களுக்குப் பின் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் நிச்சயம் குறித்து எந்த செய்தியையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த ஜோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள், ஹைதராபாத்தில் உள்ள தேவரகொண்டாவின் வீட்டில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க இந்தத் தனிப்பட்ட சடங்கு நடந்ததாகத் ஸ்கிரீன் (SCREEN) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த 43வது இந்திய தின அணிவகுப்பு மற்றும் 'பாரத் பியாண்ட் பார்டர்ஸ்' நிகழ்வு உட்படப் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொண்டனர். மேலும், அவர்கள் இருவரும் கீதா கோவிந்தம் (2018) மற்றும் டியர் காம்ரேட் (2019) போன்ற திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.