‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களைத் தான் எதற்காகப் பேசினேன் என விளக்கம் அளித்துள்ளார் விஜய்.
‘மெர்சல்’ படத்தில், ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து வசனங்கள் பேசியிருந்தார் விஜய். இந்த வசனங்களை நீக்க வேண்டும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால், படத்துக்குப் பெரிய அளவில் விளம்பரம் கிடைத்தது. அதேசமயம், விஜய்க்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்தனர். இதனால், ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன. அத்துடன், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் வெர்ஷனிலும் இந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ வழங்கும் விழாவில் பேசிய விஜய், அவசியம் கருதே அந்த வசனங்களைப் பேசியதாகத் தெரிவித்தார். அத்துடன், பிரச்னையின்போது உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.
கமல்ஹாசனைத் தொடர்ந்து விஜய்யும் மேடைகளில் அரசியல் பேசத் தொடங்கிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.