/tamil-ie/media/media_files/uploads/2017/06/a575.jpg)
விஜய் தந்தை எஸ்.ஏ.சி. என இன்று நாம் சொல்லலாம். ஆனால், அன்று எஸ்.ஏ.சி. மகன் என்ற அடையாளத்தோடு தான் விஜய் அறிமுகமானார். அந்த அளவிற்கு 80-களில் பரபரப்பான பல படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
அவருக்கு இன்று உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. அந்த விழா மேடையில் பேசிய எஸ்.ஏ.சி, "இன்று மக்களுக்கு தொண்டு செய்தால், நாளை அவன் தலைவன் ஆக முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், "எந்தவித எதிர்பார்ப்பும் இன்றிதான் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கினார்" என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், "நாடு வல்லரசு ஆவது எல்லாம் இருக்கட்டும். முதலில் நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு ஒரு நல்லராக இருக்க வேண்டும்" என்று பேசியது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு சூழ்நிலையில், விஜய் அப்படி பேசியது அரசியல் நோக்கர்கள் மத்தியில் கவனிக்கப்படும் விஷயமாக அமைந்தது.
இந்தச் சூழ்நிலையில், 'இன்று தொண்டு செய்பவர்கள் நாளை தலைவன் ஆகலாம்' என எஸ்.ஏ.சி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.