நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த வருடம் வெளியாக உள்ள ’வாரிசு’ படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் கூறிய குட்டி கதை அனைவரையும் ஈத்துள்ளது.
நடிகர் விஜய் என்றாலே மாஸ் படங்கள் என்ற ஒரு கமெர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அவரது இளமை காலத்தில் பல்வேறு விதமான கதை களங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இந்நிலையில் இந்த கமெர்ஷியல் பாணியை சமீப காலமாக மாஸ் நடிகர்கள் சமரசம் செய்துகொண்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அப்படி விஜய்-யின் மாஸ்டர் படம் ஒரு திப்புமுனையாக அமைந்தது. மாஸ்டர் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய கதையும் மிகவும் பிரபலாமனது.

இந்நிலையில் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய் ஒரு குட்டி கதை கூறியுள்ளார். “ ஒரு வீட்டில் ஒரு அப்பா, அம்மா, தங்கச்சி, அண்ணா இருந்தாங்க. அப்பா எப்பவுமே இரண்டு குழந்தைகளுக்கும் தினமும் சாக்லேட் வாங்கி வருவாங்க. தக்கச்சி அந்த சாக்லேட்டை உடனே சாப்பிட்டுவிடுவாங்க. ஆனால் அண்ணன் அதை ஒளித்து வைப்பார். ஒரு நாள் தங்கச்சி அண்ணாவிடம் வந்து. அண்ணா அன்புனா என்னனு கேக்கும்போது. நீ எடுப்பனு தெரிஞ்சும் அதே எடத்துல சாக்லேட்டை ஒளிச்சு வைக்குறேன்ல. அதான் அன்பு. எனது ரசிகளின் அன்புதான் எனது போதை. உலகின் மிகப் பெரிய ஆயுதம் அன்பு” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ 1990-ம் ஆண்டு எனக்கு போட்டியாக ஒரு நடிகர் இருதார். அவரை தோற்கடிக்கவே நான் வேகமாக ஓடினேன். அவர்தான் எனக்கு சவாலான போட்டியாளர். அவர்தான் ஜோசப் விஜய். எனக்கு நான்தான் போட்டியாளர்’ என்று கூறினார்.