/tamil-ie/media/media_files/uploads/2018/02/vijay-sethupathi-1.jpg)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சியின் ஃபைனலில், விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
போட்டியாளர்களின் நடனத் திறமையை வெளிப்படுத்த விஜய் தொலைக்காட்சி களம் அமைத்துக் கொடுத்துள்ள நிகழ்ச்சி ‘கிங் ஆஃப் டான்ஸ்’. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் தற்போது நடைபெற்று வருகிறது. சாண்டி, ஷெரிப் மற்றும் ஜெப்ரி என மூன்று டான்ஸ் மாஸ்டர்கள் கேப்டன்களாக இருந்து போட்டியாளர்களை வழிநடத்த, டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்து நிறை, குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார்.
இதன் இறுதிச்சுற்றில் அஸ்வின் ஸ்காட், யோபு மற்றும் மெர்சினா, ஏடிஎஸ் கிட்ஸ், ஓ2, விக்னேஷ், லாப் கிரு, பிபின் மற்றும் பிரின்சி, வேலம்மாள் கிட்ஸ் என மொத்தம் 8 பேர் (குழு) போட்டி போட்டனர். அவர்களில், ‘கிங் ஆஃப் டான்ஸ் - சீஸன் 2’ பட்டத்தை வெல்லப்போவது யார் எனத் தெரிந்துகொள்ள, வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியைப் பாருங்கள்.
பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஃபைனலில், விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், வரலட்சுமி சரத்குமார், பிந்து மாதவி, காயத்ரி ரகுராம், டிடி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். சிறப்பு நடன விருந்தாக சஞ்சிதா ஷெட்டி ஆடி, போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். ரம்யா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.